Tuesday, September 24, 2013

குருதி பூஜை விளக்கம்:

குருதி பூஜை விளக்கம்:

முன்பொரு காலத்தில் மகா அசுரன் என்பவன் இருந்தான். அவன் கடுமையான தவம் புரிந்து சிவனிடம் சாகாவரம் பெற்றான். இந்த வரத்தினால் தேவர்களை துன்புறுத்தினான்.துன்பத்தை தாங்கமுடியாத தேவர்கள் சிவன்,பிரம்மா , விஷ்ணுவிடம் முறையிட்டனர். இதைக்கேட்ட பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடம் நீங்கள் தானே மகா அசுரனுக்கு வரம் அருளிநீர்கள் எனவே நீங்களே வழி கூறுங்கள் என்றனர். அதற்கு சிவன் தன்னுடைய ஐந்து முகத்திலிருந்து (ஈசானம், அகோரம், தத்புருஷம்,வாமதேவம்,சத்யோஜாதம்)என்று சொல்லக்கூடிய அகோர சத்ரு சம்ஹார மூர்த்தியை உருவாக்கி மகா அசுரனை சம்ஹாரம் செய்துவர அனுப்பினார்.அவர் மகா அசுரனை இரண்டாக பிளந்து குருதியை குடித்துவிட்டு உக்கிரத்துடன் முதலில் பிரம்மாவிடம் சென்று தன்னுடைய உக்ரம் தணியவில்லை என்று முறையிடுகிறார். இதனை பார்த்த பிரம்மா அஞ்சி சிவனிடம் தஞ்சம் அடைகிறார். அதற்கு சிவபெருமான் பைரவரிடம் இனி எந்த ஒரு சம்ஹாரம் செய்தாலும் அவர்களுடைய குருதியை உனக்கு அளிப்பதாக உறுதி அளித்தார். இதற்கு உக்கிரம் தணியாத பைரவர் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். வரக்கூடிய காலத்தில் பாரதப்போர் ஒன்று நடை பெறும் அந்த போரில் உனக்கு தேவையான குருதியை அளிக்கிறேன் என விஷ்ணு உறுதி அளித்தார். அதனை ஏற்று பைரவர் சாந்தம் அடைகிறார். இதனை மையமாக வைத்து குருதி பூஜை நடைபெறுகிறது.
பூஜையின் விளக்கம் :

பெரிய எட்டு பந்தங்களில் 64 பைரவரை 8 பைரவராக உருவாக்கி

1.அசிதங்க பைரவர்,
2.ருர பைரவர்,
3.குரோத பைரவர்,
4. சண்ட பைரவர்
5. உன்மத்த பைரவர்
6.கபால பைரவர்
7.பீஷண பைரவர்
8.சம்ஹார பைரவர்

அதனுள் சிறிய பந்தமாக 8 வகையான மனைவி சக்தி வரிசையை ஆவாகனம் செய்கிறார். (பிராமஹி , மகேஷ்வரி ,வாராவதி, இந்திராணி,கௌமாரி,வைஷ்ணவி,  சண்டா ) 8 வகையான சக்திகளையும்  8வகையான சக்தியிடம் சேர்த்து 8வகையான  சக்திகளையும் உற்சவரிடம்  சேர்த்தால் 64 பைரவர்சக்திகளும் உற்சவமூர்த்தியிடம்     வருகிறது. அப்பொழுது உக்கிரம் அடைகிறார்.அந்த உக்கிரத்தை சாந்தி செய்ய 8 வகையான குருதியாக பாத்திரத்தில் குங்குமம் கரைத்து குருதியாக பாவித்து பூஜை 
 செய்து பைரவருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அந்த தீர்த்தம் (குருதி) நம் மேல் பட்டால் கெட்ட  சக்திகள், கண்திருஷ்டி , எதிரிகள் தொல்லை தீயசக்திகள் அனைத்தும் அந்த நிமிடமே விலகிவிடும்.  

வரமிளகாய்  யோகம்

      பைரவர், பகுலாமுகி ,மோகினி, சக்திகளை கலசத்தில் ஆவாகனம் செய்து பகுலாமுகிக்கு பிடித்த மிளகும் மோகினிசக்திக்கும் பிடித்த வேப்பெண்ணெய் மற்றும் பூசணி கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.இந்த யாகத்தின் பலன் எதிரிகளின் தொல்லை விலகும். கண்திருஷ்டி, நாசம் விலகும்.தீயசக்திகள் விலகும். சத்ரு சம்ஹார பைரவர் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

மற்றும் பூஜை பற்றிய விபரங்கள் அறிய குருக்கள் திரு கிருபாகரன் சாமியை அணுகலாம். 09443272066

தேய்பிறை அஷ்டமி திதி விசெஷம்

அஷ்டமி திதியில் பைரவரை வனங்கினால் ஐஸ்வ்ர்யம் சுகம்,பொன்,பொருளையும் தருவார். அஷ்டமி திதியில் அஷ்ட்லக்ஷ்மிகளும் பைரவரை வனங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரிவதால், நாமும் அஷ்டமிதிதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலயில் வ்ருதமிருந்து பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்திட, நினைத்து எல்லாம் நடக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் என்னையால் தீபம் ஏட்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க முடியாத தொல்லைகள் நீங்கும் நல்ல் நல்ல ஆருள் கிடைக்கும்
பஞ்ச தீப என்னைய்

(இலுப்பண்ணய்,விளகெண்ணெய் வேப்பண்ணய் (தேங்காய் எண்ணெய் / எள்ளு எண்ணெய்) பசும் நெய்). பைரவ பெருமானுக்கு சிறு துனியில் மிளகை சிறு
மூட்டையாக கட்டி  ந்ல்லெ ண்ணய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லாவளமும் பெருகும்
  

No comments:

Post a Comment