Tuesday, September 24, 2013

அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர்




அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர் சுவாமி திருக்கோவில் திருத்தல வரலாறு


தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் கடையெழு வல்லல்களில் ஒருவரான அதியமான் ராஜாவால் அதியமான் கோட்டையில் தனித்திருதலமாக அதியமான் ராஜாவினால் ஸ்தாபனம் செய்த திருக்கோவில் அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர் சுவாமி திருக்கோவில் இதுதான்.

காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என்று இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக இந்த திருக்கோவில் திருத்தலமாக அமைந்துள்ளது.  சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட புராதன வரலாற்று சின்னமாக திகழ்கிறது இத்திருக்கோவில். பரிகார ஸ்தலமாக திகழும் ஆலயம் இது. சிவபெருமானின் அவதாரமாக விளங்ககூடியவர் காலபைரவர்.

தனித்திருத்தலமாக விளங்ககூடிய இந்த காலபைரவர் காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.  உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்கள் அனைத்தும் காலபைரவர் ஆளுகைக்கு உட்பட்டதே.  இந்த காலசக்ரத்தினை இயக்கும் பரம்பொருளே காலபைரவர்.  எனவே இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சனைகளும் மன சங்கடங்களும் நீங்கப்பெற ஒரே கோவிலில் நீங்கும் வகையில் அமைந்த புராதன திருக்கோவில் ஆகும்.  எல்லாவிதமான வழிபாட்டிற்கும் கைமேல் பலன் கிடைக்கும்.  தலைசிறந்த பரிகாரத் திருத்தலமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் அதியமான் ராஜாவுக்கு ராஜ்யத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள், தீர்க்கவேண்டி அவரின் அரசவையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் இதற்கான சங்கடங்களை தீர்ப்பதற்கான பரிகாரங்களை கேட்டுக்கொண்டார்.  ஜோதிடர்கள் ஆருடம் பார்த்து அதியமான் ராஜாவிடம் கூறியதாவது:

இப்படியான இக்காலபைரவரை வழிபட்டு வந்த அதியமான் மன்னனது மனசங்கடங்களும், பிரச்சனைகளும் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் ஜெயம் கண்டார்.  அன்றிலிருந்து காலபைரவரை தன் குல தெய்வமாகவே வணங்கியும், வழிபட்டும் வந்தார்.  மேலும் தன் கோட்டை சாவி மற்றும் கஜான சாவி என அனைத்தும் காலபைரவரிடத்து பாதுகாத்து வந்தார்.   அதுமட்டுமில்லாமல் அவரின் வீரவாளினை அனுதினமும் காலபைரவரின் திருப்பாதங்களில் வைத்து காலையும், மாலையும் பூஜை செய்து எடுத்து சென்றால் அவர்க்கு நல்ல காரியங்கள் கைகூடி வந்தது.  அதனால் அவரின் ஞாபகச் சின்னமாக வாள் இன்றும் கூட இத்திருகோவிலில் அமைந்த காலபைரவரின் திருக்கரங்களில் அமைந்து உள்ளது.  அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலமாகும்.

 இத்திருத்தலத்தில் அமைந்த்திருக்கும் காலபைரவரின் சிலையின் வடிவமைப்பு மகத்தானது.  அவரின் தலையிலே அக்னி பிழம்பினை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும், கழுத்தினிலே கபால மாலையுடனும், பூனூல் அணிந்தும், அரைஞான் கயிறாக பாம்பினை முடிந்தும், கால்களிலே சலங்கினை கொண்டும் காட்சியளிக்கிறார்.  மேலும் தன் நான்கு கரங்களில், வலது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் திரிசூலத்துடனும், இடது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும் ஏந்தியுள்ளார்.  மேலும் பத்மா பீடம் என்று சொல்லக்கூடிய பீடத்தில் அசுர சோன வாகனம் என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தில் நின்ற கோலத்துடன் நிர்வாணமாக காட்சியளிக்கிறார்.
1. அசிதாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோதன பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷன பைரவர்
8. சம்ஹார பைரவர்

ஸ்ரீ காலபைரவர் வழிபாடு விவரம்

ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்ஷன காஷி காலபைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு சாற்றிட நாகலிங்க மாலை அல்லது எலுமிச்சை பழ மாலை அணிவித்து  எள் கலந்த அன்னம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தங்கள், பாயாசங்கள் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூசைக்கான மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்குகின்றார்.  எனவே, பிதுர் தோஷம் நீங்கினால் உயர்வு பெற முடியும்.  எனவே, மேற்கண்ட பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.

இது பொது பரிகாரம்.  இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒன்பதாமிடத்து அதிபதி கிரஹம் யாரென்று அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செய்தல் கூடுதலான பலன் கிடைக்காதா என ஜோதிடர் கேட்டது காதில் விழுகிறது.  ராசி மட்டுமே தெரிந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் முன்னோர்களை சிரமப்படுத்தியவர்கள், ஜாதகம் தெரியாதவர்கள் எவர் வேண்டுமானாலும் மேற்கண்ட பரிகாரத்தை செய்து பித்ரு தோஷத்தை விலக்கிக்கொள்ளலாம்.

ஜாதகம் உள்ளவர்கள் எதனால் பித்ரு தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை ஜோதிடர் மூலம் அறிந்து கொண்டு பித்ரு பூஜையின் போது கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொண்டு பூஜைகளை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.
 மேற்கண்டவற்றை நான்காம் இடதில் கொண்டு பிதுர் தோஷத்திற்கு பரிகார முறையை அனுஷ்டித்து நல்ல பலன்களை அடையலாம்.

பிதுர் தோஷம் நிவர்த்தி அடைந்து விட்டால் மட்டும் போதாது.  பிதுர் தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்ய கூடாது.  முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்தி விட வேண்டும்.

சனி பகவான் தரும் துன்பங்களிலிருந்து விடுபட:

மக்கள் பயப்படக்கூடிய கிரஹ நாயகர்களின் முன்னணியில் இருப்பவர் சனி பகவான்.
கண்களில் ஜொலிக்கும் குரூரம் எவராயிருந்தாலும் விதிப்பயனை செய்த செய்கின்ற காரியங்களுக்கு தகுந்தாற்போல் வழங்கும் தன்மை கடவுளருக்கும் அஞ்சாமல் காரியமாற்றும் நியாயவான் ஆயுளுக்கு கரகனாய் திகழ்வதுடன்  தன ஆட்சி காலத்தில் எவரையும் நடுங்க செய்யும் சனிபகவான் அர்த்தாஷ்டம் அஷ்டம் கண்ட ஏழரை ஆண்டு சனியின் காலங்களில் ஆட்டிப்படைக்கும் தன்மையில் அஞ்சி நடுங்காதவர் எவருமில்லை .  

 பைரவ பக்தர்களை கொடுமைபடுத்துவதில் விருப்பமில்லாதவார் சனிபகவான். விதிப்பயன் காரணமாக கடுமையை கடும் பொழுது பைரவர் அருள் புரிந்து காப்பாற்றி விடுவார் . வேண்டுவோரின் தீர்ப்பவர் பைரவர் . ஸ்ரீ தக்ஷின காசி கலபைரவரே ஆவார் . சனிபகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களை தீர்ப்பவர் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷனகாசி காலபைரவர். பைரவருக்கு செய்யவேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களை செய்து சனியின் கொடூரப்பிடியிலிருந்து விடுபடுவோம் .

அர்த்தாஷ்டம சனி தரும் தொல்லைகள் விலக :

ராசிக்கு நான்காளத்தில்  வீற்றிருக்கும் சனி தாயாருக்கு உடல்நலக் கோலாரையும் வண்டி வாகனங்களில் பாதிப்பையும் சுகக்கேட்டையும் தரக்கூடியவர் .

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்சணகாசி காலபைரவருக்கு வெண்தாமரை மலர்மாலை அணிவித்து புனுகு பூசி சாம்பல் பூசணி(வெண்பூசணி) சாம்பார் கலந்த சாதம் அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக்கூடிய  தொல்லைகள் விலகும்.

கண்டச்சனியின் பிடியிலிருந்து மீள:

ஏழாமிடம்  என்னும் கலத்திர ஸ்தானத்திலே தொல்லைகள் தரும் சனி வந்திட்டால் இல்லறத்திலே இணையற்ற துன்பங்கள் வந்து சேரும்.கூட்டாளி அனைவரும்குடிகெடுக்கும் பொல்லா மனிதராய் ஆவார் . எண்ணற்ற தொல்லைகளிலிருந்து  விடுபட கணவனோ மனைவியோ விரும்புவது இயற்கை . எனவே திங்கட்கிழமை நாளில் காலை 7:30 முதல் 9:00 மணிக்குள் அதியமான்கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி காலபைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி புனுகு பூசி சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர கண்டச் சனியில் ஏற்பட்ட தோஷங்கள்  விலகும்

அஷ்டமசனியின் கொடுமை விடுபட

               எட்டாம் இடத்திலே வந்து  என்னற்ற இன்னல் தரும் சனிபகவான் ஆயுள் அமைதி தராவிட்டாலும் படாத சித்திரவதை படுத்தி விடுவார். அவருடைய தொல்லையிலிருந்து  விடுபட சனிக்கிழமை நாளில் இரவு 7:30 மணியில் இருந்து 9:00 மணிக்குள் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி  காலபைரவருக்கு கருப்பு பட்டு அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

ஏழரை ஆண்டு சனியின் ஆதிக்கம் குறைய :

                ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரை ஆண்டுகள் தன கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப்படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்து தப்பிக்க வழி வகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு.
ஊருவிட்டு ஊரு போவது , மனையாள் மதிக்காதது ,பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களில் இருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைக் காண்போம்.
              சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் பாகற்காய் கூட்டு பால் பாயாசம் படையலிட்டு இரும்பு விளக்கில் இலுப்பை எண்ணெய்    தீபமிட்டு அர்ச்சனை செய்துவர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

         ராசிக்கு 12-ல் சனி இருக்கும்போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும் போது எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும் போது சம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

                தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதை போக்க திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி ஜவ்வரிசி  பாயாசம் ம்ன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்
 சகோதர ஒற்றுமை ஏற்பட செவ்வாய் கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம்பருப்பு பொடி கலந்த அன்னம் , செம்மாதுளம்  படையலிட்டு அர்ச்சனை செய்து வர சகோதர ஒற்றுமை ஏற்படும்.
எதிர்ப்புகள் அகலவும்,வெற்றிகள் குவியவும் :

   செவ்வாய் கிழமை நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம்பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில்    நெய் தீபமிட்டு வேக வைத்த பீட்ரூட் கலந்த பாயாசம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.     
கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வின் போது :

            புதன்கிழமை நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி  காலபைரவருக்கு  மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிபருப்பு பொடி கலந்த அன்னம் பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
 வியாபாரத்தில் வெற்றி வாகை சூட, புதிய தொழில் தொடங்க:
                புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் அதியமான்கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி புனுகு பூசி பாசிப்பயறு சுண்டல்,பாசிப்பயறு பாயாசம்,கொய்யாப்பழம்,பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம். 
தனப்ராப்தி ஏற்பட:
              தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை அதியமான் ஸ்ரீ தக்ஷனகாசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால்பாயாசம்,நெல்லிக்கனி,ஆரஞ்சுப்பழம்,வறுத்த  கடலைப்பருப்பு பொடி  கலந்த அன்னம் படைத்தது அர்ச்சனை செய்துவர தனப்ராப்தி ஏற்படும்.  
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட:
               வியாழக்கிழமை நாளில் காலை 7:30 மணிக்குள் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு  சந்தனக்காப்பு செய்து மூடி முந்திரிவித்து எனப்படும் முந்திரியால் மாலை அணிவித்து (முந்திரி பருப்பால் மாலை அணிவித்தால் முழு பலன் ஏற்படாது. கர்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கியது போல காணப்படும் முந்திரி பருப்புடன் கூடிய முந்திரிக்கொட்டையில் மாலை அணிவித்தால் தான் முழு பலன் கிட்டும்.)புனுகு பூசி முந்திரி பருப்பு, கொண்டைக்கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை
செய்து 5 பேருக்கு அன்னதானம் வழங்கினால் காலபைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கலைத்துறையில் சாதனை படைக்க:         
                    வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைபொங்கல் ,சேமியா பாயாசம் மாம்பழம்  படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம் .
நாகதோஷம் நீங்க:
       வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்க பூமாலை அணிவித்து பால் சாதம், பால்பாயாசம் நைவேத்தியமாக படைத்து  அர்ச்சனை செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும்.(அருகே உள்ள பாம்பு புற்று அருகே ஒரு முட்டையை மேல் பகுதியில் லேசாக உடைத்து வைக்கவேண்டும்.)
விஷபயம் நீங்க:         
            சனிக்கிழமை  நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நாகலிங்கப்பூ மாலை அணிவித்து புனுகு பூசி எள்  கலந்த சாதம்,பால்பாயாசம்,கருநிற திராக்ஷை நைவேத்யமாக படைத்து அர்ச்சனை செய்தல் விஷ பயம் நீங்கும்.(நாகலிங்க பூமாலையில் சிறிய நங்கை, பெரிய நங்கை இலைகளை சேர்த்து கட்டுவது சிறப்பு.
பிரேத சாபம் நீங்க:
               எட்டிலே கேது உடையவர்கள் பிரேத சாபம் உடையவர்கள் என்றும் மாங்கல்ய தோஷம் உடையவர்கள் என்றும் நீங்கள் அறிவீர்கள்.
பிரேத சாபம் விலக வேண்டுமானால் அமாவாசை நாளில் எமகண்டத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நீல நிற பூமாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை அன்னம், எள்  கலந்த அதிரசம் கொள்ளுபொடி கலந்த அன்னம் , விளாம்பழம் அல்லது வில்வப்பழம் படையலிட்டு அர்ச்சனை செய்து எட்டு நபர்களுக்கு அன்ன தானம்  செய்து பசுவிற்கு எள்ளுருண்டை உண்ணத் தருவதுடன் காலத்திற்கு எல் சாதம் வைத்து வழிபட்டு வர பிரேத சாபம் விலகும்

மாங்கல்ய தோஷம் விலக வேண்டுமானால்:   
             செவ்வாய்கிழமை நாளன்று எமகண்டத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் கொம்பு மாலை சூட்டி மஞ்சள் கயிறு(தாலிக்கயிறு) சமர்ப்பித்து சர்க்கரைபொங்கல்,பால்பாயாசம்,பானகம் படையலிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்  சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்குமம் தந்து ஆசீர்வாதம் பெற்றால் மாங்கல்ய தோஷம் விலகும். தாலி  பாக்கியம் நிலைக்கும்.  நவகிரஹங்களின் பிராண தேவதையானநவபைரவர்களின் காயத்திரியை ஓதி நற்பலன் பெறலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவனாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.மற்றும் தனித்து விளங்கும் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்திலும் செய்யலாம். மங்களம் என்றும் கிடைக்கும்.  
  

No comments:

Post a Comment