Tuesday, September 24, 2013

கால பைரவர் த்யாநம்

கால பைரவர் த்யாநம்

க்ஷெத்ரா பால பைரவர் -

ரக்தஜ்வலா ஜடாதரம், ஸஸிதரன், ரக்தான்க தெஜொ மயம்
டக்கஷூலா கபாலபாஸ கதாதரம் பைரவம்,
நிர்வானம் கதாவாஹனம்  ட்ரினாயம்ச அனன்த கொலாஹலம்,
வன்தெ பூதபிஸாச்ச நாத வடுகம் க்ஷெத்ரஸ்யபலம் ஷுபம்

அஸிதாங்க பைரவர் – (கல்வியில் மென்மெ பெற)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், மூன்டமால பூஷிதம்
ஸ்வெதவர்னம்,க்ருபாமூர்திம்,பைரவம் குன்டலொஜலம்,
கடகபால ஸம்யுக்தம், குமாரஸ்ய டிகம்பரம்,
பாநம்பத்ரந்ச ஸன்கம் ச அக்ஷாமாலம் குன்டாலம்
நாக யக்னொபவீதம் சா தரிநம் ஸுவிபூஷிதம்
ப்ரஹ்மனி ஷக்தி ஸஹிதம் ஹம்ஸரூதம் ஸுரொபிநம்,
ஸர்வபீஷ்டா தரம் நித்யம் அஸிதான்கம் பஜாம்யஹம்

ருரு பைரவர் - (கடன் சுமை குறைய)

   ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
   தன்கம் க்ர்ஷ்ன ம்ருகம் பாத்ரம் பிபிராநம் சக்ரு பாநகம்
   மஹெஸ்வராயயுதம் தெவம் வ்ருஷரூதம் ஸ்மித வாஹநம்
   ஸூத ஸ்படிகம் ஸந்கரம், நமாமி ருரு பைரவம்

  சன்ட பைரவர் -  (சத்ரு தொல்லை நீங்க)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
தனுர் பநாந்ச பிப்ரானம், கடகம் பாத்ரம் தடைவ சா,
கொஉமாரி ஷக்தி ஸஹிதம்  ஷிகிஹி வாஹந ஸ்திதம்
கொவ்ரி வர்நாயுதம் தெய்வம் வந்தெ  ஸ்ரி சன்ட பைரவம்

க்ரொத பைரவர் -  (ஆகங்காரம்ன் ஆகல, சனி பாதிப்பு குறைய)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
கடம் ஷன்கம் சா சக்ராந்ச பாத பத்ராந்ச தரிநம்
லக்ஷ்மியாம்ச ஸஹிதம் வமெ கருடாஸந ஸுஷிதம்
நீல வர்நம் மஹ தெய்வம் வன்தெ ஸ்ரி க்ரொத பைரவம்

உன்மன்த பைரவர் -  (தீய குண்ங்கள் விலக)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
ஹெமவர்நம்,  மஹதெவம், ஹஸ்த வாஹந ஸுஷிதம்
கடகம்,கபாலம், முஸ்லாம், தத்தாந்தம்,கெடகம் ததா
வராஹி சக்தி ஸாஹிதம் வன்தெ உன்மன்த பைரவர்

கபால பைரவர் - (ஆரியாமை நீங்க)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
பாஸம்,வஜ்ரம், ததா கடகம் பாந  பத்ராந்ச் தரினம்
இந்த்ரானி சக்தி ஸஹிதம் கஜ வஹன ஸுஸ்திதம்
கபால பைரவம் வந்தெ பத்ம ராக பிரபம் ஷுபம்

பீஷன பைரவர் - (பயம் நீங்க)

ட்ரிநெத்ரம், வரதாம் சான்தம், குமாரம்சா டிகாம்பரம்
கடம், ஷூலம், கபாலந்ச தரிநம் முஸலாம் ததா
சாமுந்டி சக்தி ஸஹிதம் ப்ரெத வாஹன ஸுஷிதம்
ரக்த வர்நம் மஹாதெவ்ம் வந்தெ பீஷன பைரவம்

ஸம்ஹார பைரவர் -  (துஷ்டர்களெ ஆழிக்க)

தாஸா பாஹும் ட்ரினெத்ரம்ச ஸர்ப யக்நொபவீதிநம்
தமிஷ்ட்ர கரால  வதநம் அஷ்டைஷ்வர்ய ப்ரதாயகம்
திகம்பரம் குமர்ந்சா ஸிம்ஹ வஹன ஸம்ஸ்திதாம்
சூலம், தமருகம் ஷந்கம், கடம் சக்ராந்ச தரிநம்
கடகம் பாத்ரம்சா கட்வாகம் பாஸ மந்குஸ மெவசா
உக்ர ரூபம் மதொந்மதமம் படா வாலை
சந்திகா ஷக்தி ஸஹிதம் த்யாயெத் ஸம்ஹார பைரவம்



ஆஷ்ட பைரவர் காயத்ரி மன்திரஙகள்

              ஆஷ்ட பைரவர் காயத்ரி மன்திரஙகள



    அஸிதாங்க பைரவர் 
            
ஓம் ஞானதெவாய வித்மஹெ
வித்யா ராஜாய தீமஹி
தந்நொஅஸிதாங்க பைரவ ப்ரசொத்யாத்

ருரு பைரவர் 

ஓம் ஆண்ந்த ரூபாய வித்மஹெ
டந்கெஷாய தீமஹி
தந்நொ  ருரு பைரவப்ரசொத்யாத்

சன்ட பைரவர் ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹெ
மஹாவீராய தீமஹி
தந்நொ சன்ட பைரவ ப்ரசொதயாத்

க்ரொத பைரவர் 

ஓம் க்ரிஷ ன வர்னாய வித்மஹெ
லட்ச்மி தராய தீமஹி
தந்நொ க்ரொதன பைரவ ப்ரசொதயாத்


     உன்மன்த பைரவர்
            
   ஓம் மஹாமன்த்ராய வித்மஹெ
   வாராஹி மனொகராய தீமஹ
   தந்நொ உன்மதத் பைரவ ப்ரசொதயாத்

கபால பைரவர்                 

ஓம் காலதன்டாய வித்மஹெ
வஜ்ரவீராய தீமஹி
தந்நொ கபாலபைரவ ப்ரசொதஸ்யாத்.

பீஷன பைரவர் 

ஓம் சூல்ஹஸ்தாய வித்மஹெ
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷன பைரவ ப்ரசொதயாத்

ஸம்ஹார பைரவர் 

ஓம் மங்களெஷாய வித்மஹெ
சன்ட்டிகாப்ரியாய தீமஹி
தந்நொ ஸம்ஹார பைரவ ப்ரசொதயாத்

ஸ்ரீ கால பைரவாஷ்டகம்


ஸ்ரீ கால பைரவாஷ்டகம்

தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞ ஸூத்ரம் -  இந்து- ஷேகரம் க்ருபாகரம் 1
நாரதாதி யோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

பானுகோடி - பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்டமீப்ஸித்தார்த்த - தாயகம் த்ரிலோசனம் 1
காலகாலம் - அம்புஜாக்ஷம் அக்க்ஷஷூலம் - அக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

சூலடங்க - பாச - தண்ட - பானிம்- அதிகாரனம்
ச்யாமகாய - ஆதிதேவம் - அக்ஷ்ரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

புக்தி முக்தி தாயகம் ப்ரஷஸ்த்த- சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம் 1
நிக்வானன் - மனொக்ன ஹெம கிங்கினீலஸாத்கதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

தர்மஸேது பாலகம் ட்வதர்மா மார்க நாசகம்
கர்மபாச மோசகம் ஸுஷர்மா  தாயகம் விபும் 1
ஸ்வர்ண வர்ண சேஷ பாச - சோபிதாங்க மண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

ரத்ன படுக்க - ப்ரபாபிர் மபாத - யுகமகம்
நித்யம அத்விடீயம் - இஷ்ட தைவதம் நிரன்ஜனம்1
ம்ருத்யு தர்ப்ப - நாசனம் கரால தமஷ்ட்ர மொக்ஷனம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

அட்டஹாஸ - பின்ன பத்மஜாண்ட - கொஷாஸன்டடிம்
த்ருஷ்டிபாத - னஷ்டப்பான்ஜலம் உக்ர  சாஸனம் 1
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிம் அலிகாந்தரம்
காசிகா - பராதிநாத காலபைரவம் பஜே 11

புதஸங்க - நாயகம் விசால கீர்த்தி தாயகம்
காசிவாஸ - லேஈக புண்ய - பாபசோதகம் விபும் 1
நீதிமார்க்க கொவிந்தம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோக மோஹ தைன்ய லோப - கோபதாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம் 11



குருதி பூஜை விளக்கம்:

குருதி பூஜை விளக்கம்:

முன்பொரு காலத்தில் மகா அசுரன் என்பவன் இருந்தான். அவன் கடுமையான தவம் புரிந்து சிவனிடம் சாகாவரம் பெற்றான். இந்த வரத்தினால் தேவர்களை துன்புறுத்தினான்.துன்பத்தை தாங்கமுடியாத தேவர்கள் சிவன்,பிரம்மா , விஷ்ணுவிடம் முறையிட்டனர். இதைக்கேட்ட பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடம் நீங்கள் தானே மகா அசுரனுக்கு வரம் அருளிநீர்கள் எனவே நீங்களே வழி கூறுங்கள் என்றனர். அதற்கு சிவன் தன்னுடைய ஐந்து முகத்திலிருந்து (ஈசானம், அகோரம், தத்புருஷம்,வாமதேவம்,சத்யோஜாதம்)என்று சொல்லக்கூடிய அகோர சத்ரு சம்ஹார மூர்த்தியை உருவாக்கி மகா அசுரனை சம்ஹாரம் செய்துவர அனுப்பினார்.அவர் மகா அசுரனை இரண்டாக பிளந்து குருதியை குடித்துவிட்டு உக்கிரத்துடன் முதலில் பிரம்மாவிடம் சென்று தன்னுடைய உக்ரம் தணியவில்லை என்று முறையிடுகிறார். இதனை பார்த்த பிரம்மா அஞ்சி சிவனிடம் தஞ்சம் அடைகிறார். அதற்கு சிவபெருமான் பைரவரிடம் இனி எந்த ஒரு சம்ஹாரம் செய்தாலும் அவர்களுடைய குருதியை உனக்கு அளிப்பதாக உறுதி அளித்தார். இதற்கு உக்கிரம் தணியாத பைரவர் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். வரக்கூடிய காலத்தில் பாரதப்போர் ஒன்று நடை பெறும் அந்த போரில் உனக்கு தேவையான குருதியை அளிக்கிறேன் என விஷ்ணு உறுதி அளித்தார். அதனை ஏற்று பைரவர் சாந்தம் அடைகிறார். இதனை மையமாக வைத்து குருதி பூஜை நடைபெறுகிறது.
பூஜையின் விளக்கம் :

பெரிய எட்டு பந்தங்களில் 64 பைரவரை 8 பைரவராக உருவாக்கி

1.அசிதங்க பைரவர்,
2.ருர பைரவர்,
3.குரோத பைரவர்,
4. சண்ட பைரவர்
5. உன்மத்த பைரவர்
6.கபால பைரவர்
7.பீஷண பைரவர்
8.சம்ஹார பைரவர்

அதனுள் சிறிய பந்தமாக 8 வகையான மனைவி சக்தி வரிசையை ஆவாகனம் செய்கிறார். (பிராமஹி , மகேஷ்வரி ,வாராவதி, இந்திராணி,கௌமாரி,வைஷ்ணவி,  சண்டா ) 8 வகையான சக்திகளையும்  8வகையான சக்தியிடம் சேர்த்து 8வகையான  சக்திகளையும் உற்சவரிடம்  சேர்த்தால் 64 பைரவர்சக்திகளும் உற்சவமூர்த்தியிடம்     வருகிறது. அப்பொழுது உக்கிரம் அடைகிறார்.அந்த உக்கிரத்தை சாந்தி செய்ய 8 வகையான குருதியாக பாத்திரத்தில் குங்குமம் கரைத்து குருதியாக பாவித்து பூஜை 
 செய்து பைரவருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அந்த தீர்த்தம் (குருதி) நம் மேல் பட்டால் கெட்ட  சக்திகள், கண்திருஷ்டி , எதிரிகள் தொல்லை தீயசக்திகள் அனைத்தும் அந்த நிமிடமே விலகிவிடும்.  

வரமிளகாய்  யோகம்

      பைரவர், பகுலாமுகி ,மோகினி, சக்திகளை கலசத்தில் ஆவாகனம் செய்து பகுலாமுகிக்கு பிடித்த மிளகும் மோகினிசக்திக்கும் பிடித்த வேப்பெண்ணெய் மற்றும் பூசணி கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.இந்த யாகத்தின் பலன் எதிரிகளின் தொல்லை விலகும். கண்திருஷ்டி, நாசம் விலகும்.தீயசக்திகள் விலகும். சத்ரு சம்ஹார பைரவர் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

மற்றும் பூஜை பற்றிய விபரங்கள் அறிய குருக்கள் திரு கிருபாகரன் சாமியை அணுகலாம். 09443272066

தேய்பிறை அஷ்டமி திதி விசெஷம்

அஷ்டமி திதியில் பைரவரை வனங்கினால் ஐஸ்வ்ர்யம் சுகம்,பொன்,பொருளையும் தருவார். அஷ்டமி திதியில் அஷ்ட்லக்ஷ்மிகளும் பைரவரை வனங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரிவதால், நாமும் அஷ்டமிதிதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலயில் வ்ருதமிருந்து பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்திட, நினைத்து எல்லாம் நடக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் என்னையால் தீபம் ஏட்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க முடியாத தொல்லைகள் நீங்கும் நல்ல் நல்ல ஆருள் கிடைக்கும்
பஞ்ச தீப என்னைய்

(இலுப்பண்ணய்,விளகெண்ணெய் வேப்பண்ணய் (தேங்காய் எண்ணெய் / எள்ளு எண்ணெய்) பசும் நெய்). பைரவ பெருமானுக்கு சிறு துனியில் மிளகை சிறு
மூட்டையாக கட்டி  ந்ல்லெ ண்ணய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லாவளமும் பெருகும்
  

அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர்




அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர் சுவாமி திருக்கோவில் திருத்தல வரலாறு


தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் கடையெழு வல்லல்களில் ஒருவரான அதியமான் ராஜாவால் அதியமான் கோட்டையில் தனித்திருதலமாக அதியமான் ராஜாவினால் ஸ்தாபனம் செய்த திருக்கோவில் அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர் சுவாமி திருக்கோவில் இதுதான்.

காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என்று இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக இந்த திருக்கோவில் திருத்தலமாக அமைந்துள்ளது.  சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட புராதன வரலாற்று சின்னமாக திகழ்கிறது இத்திருக்கோவில். பரிகார ஸ்தலமாக திகழும் ஆலயம் இது. சிவபெருமானின் அவதாரமாக விளங்ககூடியவர் காலபைரவர்.

தனித்திருத்தலமாக விளங்ககூடிய இந்த காலபைரவர் காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.  உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்கள் அனைத்தும் காலபைரவர் ஆளுகைக்கு உட்பட்டதே.  இந்த காலசக்ரத்தினை இயக்கும் பரம்பொருளே காலபைரவர்.  எனவே இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சனைகளும் மன சங்கடங்களும் நீங்கப்பெற ஒரே கோவிலில் நீங்கும் வகையில் அமைந்த புராதன திருக்கோவில் ஆகும்.  எல்லாவிதமான வழிபாட்டிற்கும் கைமேல் பலன் கிடைக்கும்.  தலைசிறந்த பரிகாரத் திருத்தலமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் அதியமான் ராஜாவுக்கு ராஜ்யத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள், தீர்க்கவேண்டி அவரின் அரசவையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் இதற்கான சங்கடங்களை தீர்ப்பதற்கான பரிகாரங்களை கேட்டுக்கொண்டார்.  ஜோதிடர்கள் ஆருடம் பார்த்து அதியமான் ராஜாவிடம் கூறியதாவது:

இப்படியான இக்காலபைரவரை வழிபட்டு வந்த அதியமான் மன்னனது மனசங்கடங்களும், பிரச்சனைகளும் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் ஜெயம் கண்டார்.  அன்றிலிருந்து காலபைரவரை தன் குல தெய்வமாகவே வணங்கியும், வழிபட்டும் வந்தார்.  மேலும் தன் கோட்டை சாவி மற்றும் கஜான சாவி என அனைத்தும் காலபைரவரிடத்து பாதுகாத்து வந்தார்.   அதுமட்டுமில்லாமல் அவரின் வீரவாளினை அனுதினமும் காலபைரவரின் திருப்பாதங்களில் வைத்து காலையும், மாலையும் பூஜை செய்து எடுத்து சென்றால் அவர்க்கு நல்ல காரியங்கள் கைகூடி வந்தது.  அதனால் அவரின் ஞாபகச் சின்னமாக வாள் இன்றும் கூட இத்திருகோவிலில் அமைந்த காலபைரவரின் திருக்கரங்களில் அமைந்து உள்ளது.  அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலமாகும்.

 இத்திருத்தலத்தில் அமைந்த்திருக்கும் காலபைரவரின் சிலையின் வடிவமைப்பு மகத்தானது.  அவரின் தலையிலே அக்னி பிழம்பினை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும், கழுத்தினிலே கபால மாலையுடனும், பூனூல் அணிந்தும், அரைஞான் கயிறாக பாம்பினை முடிந்தும், கால்களிலே சலங்கினை கொண்டும் காட்சியளிக்கிறார்.  மேலும் தன் நான்கு கரங்களில், வலது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் திரிசூலத்துடனும், இடது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும் ஏந்தியுள்ளார்.  மேலும் பத்மா பீடம் என்று சொல்லக்கூடிய பீடத்தில் அசுர சோன வாகனம் என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தில் நின்ற கோலத்துடன் நிர்வாணமாக காட்சியளிக்கிறார்.
1. அசிதாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோதன பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷன பைரவர்
8. சம்ஹார பைரவர்

ஸ்ரீ காலபைரவர் வழிபாடு விவரம்

ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்ஷன காஷி காலபைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு சாற்றிட நாகலிங்க மாலை அல்லது எலுமிச்சை பழ மாலை அணிவித்து  எள் கலந்த அன்னம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தங்கள், பாயாசங்கள் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூசைக்கான மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்குகின்றார்.  எனவே, பிதுர் தோஷம் நீங்கினால் உயர்வு பெற முடியும்.  எனவே, மேற்கண்ட பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.

இது பொது பரிகாரம்.  இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒன்பதாமிடத்து அதிபதி கிரஹம் யாரென்று அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செய்தல் கூடுதலான பலன் கிடைக்காதா என ஜோதிடர் கேட்டது காதில் விழுகிறது.  ராசி மட்டுமே தெரிந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் முன்னோர்களை சிரமப்படுத்தியவர்கள், ஜாதகம் தெரியாதவர்கள் எவர் வேண்டுமானாலும் மேற்கண்ட பரிகாரத்தை செய்து பித்ரு தோஷத்தை விலக்கிக்கொள்ளலாம்.

ஜாதகம் உள்ளவர்கள் எதனால் பித்ரு தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை ஜோதிடர் மூலம் அறிந்து கொண்டு பித்ரு பூஜையின் போது கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொண்டு பூஜைகளை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.
 மேற்கண்டவற்றை நான்காம் இடதில் கொண்டு பிதுர் தோஷத்திற்கு பரிகார முறையை அனுஷ்டித்து நல்ல பலன்களை அடையலாம்.

பிதுர் தோஷம் நிவர்த்தி அடைந்து விட்டால் மட்டும் போதாது.  பிதுர் தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்ய கூடாது.  முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்தி விட வேண்டும்.

சனி பகவான் தரும் துன்பங்களிலிருந்து விடுபட:

மக்கள் பயப்படக்கூடிய கிரஹ நாயகர்களின் முன்னணியில் இருப்பவர் சனி பகவான்.
கண்களில் ஜொலிக்கும் குரூரம் எவராயிருந்தாலும் விதிப்பயனை செய்த செய்கின்ற காரியங்களுக்கு தகுந்தாற்போல் வழங்கும் தன்மை கடவுளருக்கும் அஞ்சாமல் காரியமாற்றும் நியாயவான் ஆயுளுக்கு கரகனாய் திகழ்வதுடன்  தன ஆட்சி காலத்தில் எவரையும் நடுங்க செய்யும் சனிபகவான் அர்த்தாஷ்டம் அஷ்டம் கண்ட ஏழரை ஆண்டு சனியின் காலங்களில் ஆட்டிப்படைக்கும் தன்மையில் அஞ்சி நடுங்காதவர் எவருமில்லை .  

 பைரவ பக்தர்களை கொடுமைபடுத்துவதில் விருப்பமில்லாதவார் சனிபகவான். விதிப்பயன் காரணமாக கடுமையை கடும் பொழுது பைரவர் அருள் புரிந்து காப்பாற்றி விடுவார் . வேண்டுவோரின் தீர்ப்பவர் பைரவர் . ஸ்ரீ தக்ஷின காசி கலபைரவரே ஆவார் . சனிபகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களை தீர்ப்பவர் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷனகாசி காலபைரவர். பைரவருக்கு செய்யவேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களை செய்து சனியின் கொடூரப்பிடியிலிருந்து விடுபடுவோம் .

அர்த்தாஷ்டம சனி தரும் தொல்லைகள் விலக :

ராசிக்கு நான்காளத்தில்  வீற்றிருக்கும் சனி தாயாருக்கு உடல்நலக் கோலாரையும் வண்டி வாகனங்களில் பாதிப்பையும் சுகக்கேட்டையும் தரக்கூடியவர் .

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்சணகாசி காலபைரவருக்கு வெண்தாமரை மலர்மாலை அணிவித்து புனுகு பூசி சாம்பல் பூசணி(வெண்பூசணி) சாம்பார் கலந்த சாதம் அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக்கூடிய  தொல்லைகள் விலகும்.

கண்டச்சனியின் பிடியிலிருந்து மீள:

ஏழாமிடம்  என்னும் கலத்திர ஸ்தானத்திலே தொல்லைகள் தரும் சனி வந்திட்டால் இல்லறத்திலே இணையற்ற துன்பங்கள் வந்து சேரும்.கூட்டாளி அனைவரும்குடிகெடுக்கும் பொல்லா மனிதராய் ஆவார் . எண்ணற்ற தொல்லைகளிலிருந்து  விடுபட கணவனோ மனைவியோ விரும்புவது இயற்கை . எனவே திங்கட்கிழமை நாளில் காலை 7:30 முதல் 9:00 மணிக்குள் அதியமான்கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி காலபைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி புனுகு பூசி சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர கண்டச் சனியில் ஏற்பட்ட தோஷங்கள்  விலகும்

அஷ்டமசனியின் கொடுமை விடுபட

               எட்டாம் இடத்திலே வந்து  என்னற்ற இன்னல் தரும் சனிபகவான் ஆயுள் அமைதி தராவிட்டாலும் படாத சித்திரவதை படுத்தி விடுவார். அவருடைய தொல்லையிலிருந்து  விடுபட சனிக்கிழமை நாளில் இரவு 7:30 மணியில் இருந்து 9:00 மணிக்குள் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி  காலபைரவருக்கு கருப்பு பட்டு அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

ஏழரை ஆண்டு சனியின் ஆதிக்கம் குறைய :

                ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரை ஆண்டுகள் தன கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப்படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்து தப்பிக்க வழி வகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு.
ஊருவிட்டு ஊரு போவது , மனையாள் மதிக்காதது ,பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களில் இருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைக் காண்போம்.
              சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் பாகற்காய் கூட்டு பால் பாயாசம் படையலிட்டு இரும்பு விளக்கில் இலுப்பை எண்ணெய்    தீபமிட்டு அர்ச்சனை செய்துவர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

         ராசிக்கு 12-ல் சனி இருக்கும்போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும் போது எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும் போது சம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

                தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதை போக்க திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி ஜவ்வரிசி  பாயாசம் ம்ன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்
 சகோதர ஒற்றுமை ஏற்பட செவ்வாய் கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம்பருப்பு பொடி கலந்த அன்னம் , செம்மாதுளம்  படையலிட்டு அர்ச்சனை செய்து வர சகோதர ஒற்றுமை ஏற்படும்.
எதிர்ப்புகள் அகலவும்,வெற்றிகள் குவியவும் :

   செவ்வாய் கிழமை நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம்பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில்    நெய் தீபமிட்டு வேக வைத்த பீட்ரூட் கலந்த பாயாசம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.     
கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வின் போது :

            புதன்கிழமை நாளில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி  காலபைரவருக்கு  மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிபருப்பு பொடி கலந்த அன்னம் பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
 வியாபாரத்தில் வெற்றி வாகை சூட, புதிய தொழில் தொடங்க:
                புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் அதியமான்கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி புனுகு பூசி பாசிப்பயறு சுண்டல்,பாசிப்பயறு பாயாசம்,கொய்யாப்பழம்,பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம். 
தனப்ராப்தி ஏற்பட:
              தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை அதியமான் ஸ்ரீ தக்ஷனகாசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால்பாயாசம்,நெல்லிக்கனி,ஆரஞ்சுப்பழம்,வறுத்த  கடலைப்பருப்பு பொடி  கலந்த அன்னம் படைத்தது அர்ச்சனை செய்துவர தனப்ராப்தி ஏற்படும்.  
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட:
               வியாழக்கிழமை நாளில் காலை 7:30 மணிக்குள் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு  சந்தனக்காப்பு செய்து மூடி முந்திரிவித்து எனப்படும் முந்திரியால் மாலை அணிவித்து (முந்திரி பருப்பால் மாலை அணிவித்தால் முழு பலன் ஏற்படாது. கர்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கியது போல காணப்படும் முந்திரி பருப்புடன் கூடிய முந்திரிக்கொட்டையில் மாலை அணிவித்தால் தான் முழு பலன் கிட்டும்.)புனுகு பூசி முந்திரி பருப்பு, கொண்டைக்கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை
செய்து 5 பேருக்கு அன்னதானம் வழங்கினால் காலபைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கலைத்துறையில் சாதனை படைக்க:         
                    வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைபொங்கல் ,சேமியா பாயாசம் மாம்பழம்  படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம் .
நாகதோஷம் நீங்க:
       வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்க பூமாலை அணிவித்து பால் சாதம், பால்பாயாசம் நைவேத்தியமாக படைத்து  அர்ச்சனை செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும்.(அருகே உள்ள பாம்பு புற்று அருகே ஒரு முட்டையை மேல் பகுதியில் லேசாக உடைத்து வைக்கவேண்டும்.)
விஷபயம் நீங்க:         
            சனிக்கிழமை  நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நாகலிங்கப்பூ மாலை அணிவித்து புனுகு பூசி எள்  கலந்த சாதம்,பால்பாயாசம்,கருநிற திராக்ஷை நைவேத்யமாக படைத்து அர்ச்சனை செய்தல் விஷ பயம் நீங்கும்.(நாகலிங்க பூமாலையில் சிறிய நங்கை, பெரிய நங்கை இலைகளை சேர்த்து கட்டுவது சிறப்பு.
பிரேத சாபம் நீங்க:
               எட்டிலே கேது உடையவர்கள் பிரேத சாபம் உடையவர்கள் என்றும் மாங்கல்ய தோஷம் உடையவர்கள் என்றும் நீங்கள் அறிவீர்கள்.
பிரேத சாபம் விலக வேண்டுமானால் அமாவாசை நாளில் எமகண்டத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு நீல நிற பூமாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை அன்னம், எள்  கலந்த அதிரசம் கொள்ளுபொடி கலந்த அன்னம் , விளாம்பழம் அல்லது வில்வப்பழம் படையலிட்டு அர்ச்சனை செய்து எட்டு நபர்களுக்கு அன்ன தானம்  செய்து பசுவிற்கு எள்ளுருண்டை உண்ணத் தருவதுடன் காலத்திற்கு எல் சாதம் வைத்து வழிபட்டு வர பிரேத சாபம் விலகும்

மாங்கல்ய தோஷம் விலக வேண்டுமானால்:   
             செவ்வாய்கிழமை நாளன்று எமகண்டத்தில் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷினகாசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் கொம்பு மாலை சூட்டி மஞ்சள் கயிறு(தாலிக்கயிறு) சமர்ப்பித்து சர்க்கரைபொங்கல்,பால்பாயாசம்,பானகம் படையலிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்  சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்குமம் தந்து ஆசீர்வாதம் பெற்றால் மாங்கல்ய தோஷம் விலகும். தாலி  பாக்கியம் நிலைக்கும்.  நவகிரஹங்களின் பிராண தேவதையானநவபைரவர்களின் காயத்திரியை ஓதி நற்பலன் பெறலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவனாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.மற்றும் தனித்து விளங்கும் அதியமான் கோட்டை ஸ்ரீ தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்திலும் செய்யலாம். மங்களம் என்றும் கிடைக்கும்.  
  

Ashta Bhairavar Dhyanyam




Ashta Bhairavar Dhyanyam

Khethra Pala Bhairavar-  ( Guard of Earth Bhairava )



Raktha jwalaa dharm, sasi dharan, Rakthanga thejo mayam

Dakka Shoola kapala pasa gadha dharma Bhairavam,

Nirvanam Gathavahanam Trinayanancha Ananda kolahalam

Vande bhootha pisacha natha vadukam Kshethrasya palam Shubham


I salute the leader of Ghosts and Ghouls, Lord Bhairava,

Who wears the Red flame as his Matted hair,

Who wears the Moon, who shines in Red colour,

Who holds a Drum, Spear, Skull, Rope and Mace in his hands,

Who is nude, who rides on a Dog, who has Three eyes

Who is always Hapyy and Exuberant and is the Guard of the temple.



Asithanga Bhairavar –

( Dark Bodied Bhairavar) – Gives Creative Ability



Trinethram, varadam shantham,mundamala bhooshitham,

Swetha varnam, krupa murthim, Bhairavam Kundalojjwalam,

Gada kapala samyuktham, kumarsya digambaram,

Banam pathrancha sankham cha Aksha maalaam kundalam,

Naga yagnopaveetham cha dharinam suvibhooshitham,

Brahmani Shakthi sahitham, hamsaroodam suroopinam,

Sarvabheeshta dharm nithyam Asithangam Bhajamyaham.



I pray the Dark Bhairava who fulfils all desires,

Who is forever, who has Three eyes, who blesses and is peaceful,

Who wears a Skull garland, who is White, who is the Lord of Mercy.

Who shines in his Ear Globes, who holds Mace and the Skull,

Who is young and nude, who holds Arrow, Vessel, Conch, Bead chain and Ear Globes,

Who wears Snake as Sacred thread, who is well Ornamented,

Who is with Goddess Brahmani, Rides on a Swan and is good to look at.



                                                                        Ruru Bhairavar –

( Teacher Bhairava ) – Divine Teacher


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Dangam krisna mrugam pathram bibranam chakru panakam,

Maheswarayayudham devam vrusha roodam smitha vahanam,

Sudha sphatikam sankaram namami Ruru Bhairavam.


I salute the Bhairava with the Deer, who is likePure Crystal and Destroyer,

Who has Three eyes, blesses, peaceful, young and nude,

Who holds a Hatchet, Deer, Drinking Goblet and a Sword in his hands,

Who has the armed Maheswari by his side and who is smiling and rides on a Bull.


Chanda Bhairavar

( Fierce Bhairava ) – Gives incredible Energy, cuts competition and rivals


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Dhanur banancha bhibranam, Gadagam Pathram Thadaiva cha,

Koumari shakthi sahitham, Shikihi vahana sthitham,

Gowri varnayudham Devam Vande Sri Chanda Bhairavam.


I salute the Chanda Bhairava who is pure White in colour,

Who had Three eyes, blesses, peaceful, young and nude,

Who holds Rope, Vajrayudham, Sword and Drinking Goblet,

Who has with him Kaumari Shakthi and rides on a Peacock


Krodha Bhairvar

( Angry Bhairava ) – Gives you the Power to take Massive Action.


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Gadam shankam cha Chakrancha pada pathrancha dharinam,

Lakshmyacha sahitham vame garudasana susthitham,

Neela varnam maha devam Vande Sri Krodha Bhairavam.


I salute the angry Bhairava, who is Blue and a great God,

Who has Three eyes, blesses, peaceful, young and nude,

Who is armed with Mace, Conch, Wheel, Rope and a Vessel,

Who is near Goddess Lakshmi riding on Garuda the Eagle.


                                                                  Unmantha Bhairavar

( Frantic Bhairava ) – Controls Negative ego and harmful self talk


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Hema Varnam, maha devam, hastha vahana susthitham,

Gadagam, Kapalam, Musalam, Dathantham, kedagam thadha,

Varahi shakthi sahitham Vandhe Unmatha Bhairavam.


I salute that  Frantic Bhairava who is power called Varahi,

Who has Three eyes, blesses, peaceful, young and nude,

Who is of Golden colour, great God and rides on a Swan,

And who holds Sword, Skull, Pestle and also the Shield.


Kapala Bhairavar

( Skull Bhairava ) – Ends all unrewarding work.


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Pasam Vajram, thadha Gadgam pana pathranch dharinam,

Indrani shakthi sahitham Gaja Vahana susthitham,

Kapala Bhairavam Vande Padma ragha Prabhum Shubham.


I salute the Bhairava of the Skull, who has a Shining body,

Who has Three eyes, blesses, peaceful, young and nude,

Who holds Rope, Vajrayudh, Sword and Drinking Goblet,

Who has with him Indrani Shakthi, is being well praised and rides on Elephant.


Bheeshana Bhairavar

( Terrific Bhairavar ) – Obliterates eveil spirits and Negativity.


Trinethram, varadam, santham, kumarancha digambharam,

Gadgam soolam Kapalncha dharinam musalam thadha,

Chamunda shakthi sahitham, pretha Vahana susthitham,

Raktha varnam maha devam Vande Beeshana Bhairavam


I salute the Terrific Bhairava who is a great God of Blood Red colour,

Who has Three eyes, blesses, peaceful, young and nude,

Who holds Sword, Trident, Skull and Pestle in his hand,

Who has with him Chamunda Shakthi and rides on a Corpse
  
Samhara Bhairavar

( Annihilator Bhairava ) – Complete Dissolution of old Negative Karma.


Dasa bhahum trinethram cha sarpa yagnopaveethinm,

Damishtra karala vadanam ashtaiswarya pradhayakam,

Digambaram kumarancha simha vahana samsthitham,

Soolam, Damarugam Shankam, gadam chakranchadarinam,

Gadgam pathram cha Gadwangam pasa mangusa meva cha,

Ugra roopam madonmathamambada vaali,

Chandrika Shakthi sahitham dyayeth samhara Bhairavam

I mediate on Bhairava the destroyer, who is with Chandika Shakthi,


Who has Ten hands, Three eyes, and Snake as sacred thread,

Who has Protruding teeth, Fearful look and grants Eight type of Wealth,

Who is nude, a youth and rides on a Lion,

Who holds Trident, Drum, Conch, Mace and wheel in his hands,

Who holds Sword, Vessel, Gadwangam, Rope and goad

And who has fearful looks, wears Skull garland and greatly exuberan.